எமது இனத்திற்காக தன்னையே உருக்கி தியாக வேள்வியில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட லெப். கேணல் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வு – மெல்பேர்ன் தியாக தீப கலைமாலை நிகழ்வு ~ 2023
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 36ம் ஆண்டு நினைவு நிகழ்வான தியாக தீப கலை மாலை நிகழ்வு, எதிர்வரும் செப்ரம்பர் மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.
உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன்வாழ் அனைத்து உறவுகளையும் வருகைதந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வு பற்றிய அறிவித்தல் (Jpg, Pdf & Email) இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.
தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களினுாடாக வெளியீட்டு தகுந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப்படுத்தி முழுக்குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.